| ADDED : ஏப் 24, 2024 12:26 AM
வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் உள்ள ரங்கமலையின் தென்பகுதியில் கல்வார்பட்டி ஊராட்சியில் மலையை ஒட்டி மல்லீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு மல்லீஸ்வரன் பாதயாத்திரை குழு 16 ஆண்டுகளாக ரங்க மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். இந்தாண்டும் நேற்று காலை 6:00 மணிக்கு இந்த நடை பயணம் துவங்கியது. ஆங்காங்கே தண்ணீர், பிஸ்கட், நீர் மோர் ஆகியவற்றை பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் வழங்கினர். மலையடிவார பகுதியில் உள்ள கோயிலில் அன்னதானம் நடந்தது. கல்வார்பட்டி,காசிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி, கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்தும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்வார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், ராசாக்கவுண்டனுார் சுப்பிரமணி, தம்மாநாயக்கனுார் முத்துசாமி, பூனுாத்து திருமலைசாமி செய்தனர்.