வீடு இல்லாத நிலை மாற்ற நடவடிக்கை; அமைச்சர் பெரியசாமி தகவல்
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக,'' அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் , 257 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதையடுத்து அவர் தொடர்ந்து பேசியதாவது: மாவட்டத்தில் வீடு இல்லாத நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குநர்கள் திலகவதி, சதீஸ்பாபு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஆர்.டி.ஓ., சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் பாண்டியன் கலந்துகொண்டனர்.