உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம் : ''மார்க்கம்பட்டி எல்லப்பட்டியில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்க 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக,'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.கள்ளிமந்தயத்தில் நல்லேர் உழவர் உற்பத்தியாளர் விவசாய இடுபொருள் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: மார்க்கம்பட்டி எல்லப்பட்டியில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்க 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிட்கோ மூலம் அமைக்கப்படும் இந்த முருங்கை ஏற்றுமதி மண்டலத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசினார். தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் வடிவேல் வரவேற்றார். நல்லோர்குழு சேர்மன் ரங்கநாதன், பொருளாளர் ஈஸ்வரன், செயலாளர் கந்தசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை