உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர்மோர் பந்தல் ஓகே; தண்ணீர்கூட இல்லையே அரசியல்கட்சிகள் வழியில் அரசு நிர்வாகங்கள்

நீர்மோர் பந்தல் ஓகே; தண்ணீர்கூட இல்லையே அரசியல்கட்சிகள் வழியில் அரசு நிர்வாகங்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் உள்ள நிலையில் அடிக்கும் வெயிலால் இங்கு தண்ணீர் தேடி வரும் பயணிகள் எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் அங்கேயே இளப்பாறுகின்றனர். சிலரோ அரசியல்கட்சிகள் வழியில் அரசு நிர்வாகமும் செயல்படுகிறதே என வசைபாடி செல்கின்றனர்.திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக பஸ் ஸ்டாண்ட்,பழநி ரோடு,நாகல் நகர் உட்பட 10 இடங்களில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதை சில நாட்கள் கண்காணித்து வந்த அதிகாரிகள் அதன்பின் கண்டுக்கவே இல்லை . தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையால் அவசர வேலைக்காக வெளியே வரும் மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. ஆனால் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்ட நீர்மோர் பந்தல்கள் செயல்படாது முடங்கி உள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள நீர்மோர் பந்தலில் பயணிகள் வெயிலுக்காக ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது. சிலர் குடிதண்ணீருக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதை பார்க்கும் மக்கள் அரசியல் கட்சிகள் இது போன்று ஏமாற்றும் நிலையில் அரசு நிர்வாகமும் இதன போக்கை கடைப்பிடிக்கிறார்களே என வசைபாடி செல்கின்றனர்.ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்: நகரில் செயல்படும் நீர்மோர் பந்தல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !