உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாழ்வான மின் ஒயர்களை சரி செய்த அதிகாரிகள்

தாழ்வான மின் ஒயர்களை சரி செய்த அதிகாரிகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி மூவேந்தர் நகர் திருவள்ளுவர் வீதியில் தாழ்வாக சென்ற மின் ஒயர்களை தினமலர் செய்தி எதிரொலியாக மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.சீலப்பாடி ஊராட்சி மூவேந்தர் நகர், திருவள்ளுவர் வீதியில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழித்தடத்தில் செல்லும் மக்கள் எந்நேரமும் ஒரு வித அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. காற்றடிக்கும் நேரங்களில் மின் ஒயர்கள் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றும் நிலையும் அடிக்கடி நடக்கிறது. கனரக வாகனங்கள் அப்பகுதியில் செல்லும் போது மின் ஒயர்களில் உரசுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனி மின்வாரிய உதவி பொறியாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் மூவேந்தர் நகர் ,திருவள்ளுவர் வீதியில் ஆய்வு செய்து தாழ்வான நிலையில் சென்ற மின் ஒயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ