மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
திண்டுக்கல்: -திண்டுக்கல் ஏ.எம்.சி., சாலையில் உள்ள ஆர்.வி.ஆர்., பில்டிங்கில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், பேக்கரி திறக்கப்பட்டது. திண்டுக்கல் வணிகர் சங்க முதுநிலை தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி திறந்து வைத்தார். பெரம்பலுார் அஸ்வின்ஸ் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.ஆர்.வி. கணேசன், நாகா புட்ஸ் தொழில்நுட்ப இயக்குனர் விஜய் ஆனந்த் தண்டபாணி, டீல் ரோலிங் மில்ஸ் தலைவர் ராமசாமி, டெல்டா பிரான்ட் நிறுவன தலைவர் டாக்டர் செந்தில்குமார், ஒட்டன்சத்திரம் விறலி நெய் நிறுவன நிர்வாக இயக்குனர் விஜயன் குத்துவிளக்கேற்றினர். அணில் புட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கமலஹாசன் முதல் விற்பனையை தொடங்கி வைக்க ஜி.டி.என்., கல்வி குழும நிறுவனர் டாக்டர் ரெத்தினம்முதல் பெற்றுக் கொண்டார். அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் இயக்குனர்கள் பல்ராம், மனோகரன், கிரி, கோகுல் வரவேற்றனர். மாநகராட்சி மேயர் இளமதி, டார்லிங் ஷோரூம் நிறுவனர் முருகேசன் கலந்து கொண்டனர். திறப்பு விழா சலுகையாக அஸ்வின்ஸ் பாரம்பரிய பட்சணங்கள் சார்பாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ காரம் , அரை கிலோ ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ காரம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்.6 முதல் தேங்காய் பூரணம் , எள்ளு , அம்மணி , பால் , கார கொழுக்கட்டை, மோதகம் என ஆறு வகை கொழுக்கட்டைகள் ஆர்டரின் பெயரில் வழங்கப்படுகிறது.
16-Aug-2024