உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பரளிபுதுார் முத்தாலம்மன் கோயில் விழா

பரளிபுதுார் முத்தாலம்மன் கோயில் விழா

நத்தம்: நத்தம் அருகே பரளிபுதுாரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா ஜூன் 12ல் கிராம தெய்வங்களுக்கு படையல் வைத்து வழிபாடு செய்ய துவங்கியது.நேற்று இரவு வத்திபட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதை தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு என நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.மாலையில் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை