உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் விபத்து கம்பங்கள் அகற்றம்

கொடையில் விபத்து கம்பங்கள் அகற்றம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் தினமலர் செய்தி எதிரொலியாக விபத்தை ஏற்படுத்தும் கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் போலீஸ் அவுட் போஸ்ட் அருகே போலீஸ் டிராபிக் சிக்னல் கம்பத்துடன் கூடிய விளம்பர பதாகை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி தாஸ் 55, பலியானார். சுரேஷ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில் ஏராளமான கம்பங்கள், விளம்பர பதாகைகள் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் ரோட்டோரம் ,பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், கம்பங்கள் ,டிராபிக் சிக்னல் கம்பங்கள், விளம்பர பதாகைகள் அமைப்பதற்காக ஊன்றப்பட்ட கம்பங்களை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியநாதன், நகராட்சி கமிஷனர், கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் நகர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் தேவையற்ற விளம்பரப்பதாகை, வலு விழந்த கம்பங்கள், விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள சிக்னல்கள் கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இப்பணிகள் தொடர்ந்து நடக்கும். மேலும் அனுமதியின்றி நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் அகற்றும் பணியும் தொடரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை