உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாய்ந்து கிடக்கும் சிக்னல் கம்பத்தால் விபத்து அபாயம்

சாய்ந்து கிடக்கும் சிக்னல் கம்பத்தால் விபத்து அபாயம்

டூவீலர்களால் நெரிசல்திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் இடையூறாக உள்ளது .வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்..................-----சீரமைக்கப்படாத ரோடுதிண்டுக்கல் அருகே அணைப்பட்டியிலிருந்து மைலாப்பூர் செல்லும் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்காததால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது .விவசாயிகள் பொருட்கள் கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர் கருச்சாமி, அணைப்பட்டி.............-------நடவடிக்கை எடுங்கதிண்டுக்கல்லில் வாகனத்தில் அதிக அளவில் மூடைகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. தொங்கியபடியே உள்ளதால் பின்வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார், திண்டுக்கல்..................--------சேதமடைந்த தடுப்பு சுவர்ஒட்டன்சத்திரம் பாச்சலுார் மலைரோட்டில் பல இடங்களில் பாதுகாப்புக்காக கட்டப்பட தடுப்புச் சுவர்கள் இடிந்து உள்ளன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது . இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலுச்சாமி ஒட்டன்சத்திரம்.................--------சாய்ந்து கிடக்கும் சிக்னல் கம்பம்திண்டுக்கல்- பழநி ரோட்டில் தானியங்கி சிக்னல் கம்பம் சாய்ந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து நிறைந்த ரோட்டில் சாய்த்து கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது .கம்பத்தை அகற்ற வேண்டும்.முருகேஸ்வரி, திண்டுக்கல்.................---------குப்பையால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல்- பழநி ரோட்டில் சேதமடைந்த குப்பை தொட்டியில் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.குப்பையை அகற்றுவதோடு சேதமடைத்த தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக தொட்டி வைக்க முன்வர வேண்டும். கவிதா, திண்டுக்கல்................----------சாக்கடையை துார்வாருங்கதிண்டுக்கல் நாகல்நகர் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சாக்கடையில் மண் நிரம்பி உள்ளது. சிறிய மழைக்கே கழிவு நீர் வெளியேறி ரோட்டில் செல்கிறது. மக்கள் நடக்க முடியாமல் அவதிபடுகிறார்கள்.சாக்கடையை துார்வார வேண்டும். பிரகாஷ்கண்ணன், நாகல்நகர்.................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ