விபத்தில் பள்ளி சிறுவன் காயம்
வடமதுரை; கொல்லப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் துளசிகாந்த் 10. அரசு நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். குடியிருப்பு பகுதி அருகே இருக்கும் நான்குவழிச்சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத டூவீலர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சிறுவன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.