| ADDED : ஏப் 12, 2024 05:24 AM
சேதமாகும் ரோடுஎரியோடு பாவாடைக்காரம்மன் கோயில் தெருவில் சமீபத்தில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டோர காவிரி குடிநீர் பகிர்மான மேல்நிலைத் தொட்டியில் நிரம்பி வழியும் உபரி நீர் தெருவிற்குள் பாய்வதால் ரோடு சேதமடைகிறது. ஜோதிமணி, எரியோடு.......------ஆபத்தான நிலையில் மரம்நத்தம் ஆவிச்சிபட்டி கிராமத்தின் மையப் பகுதியில் காய்ந்த நிலையில் கூந்த பனைமரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு அரிய வகை மரத்தினை உயிர்பிக்க அல்லது அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜசேகர், நத்தம்............--------கழிப்பறையால் சுகாதாரக்கேடுவேடசந்துார் பஸ் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறை சுகாதாரக்கேடாக உள்ளது .சுத்தமில்லாமல் இருப்பதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .தினந்தோறும் மாணவர்கள் ,மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் சீர் செய்ய வேண்டும். திருப்பதி, திண்டுக்கல்................--------சேதம் அடைந்த ரோடுலெக்கையன்கோட்டை மடத்துக்குளம் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்வதற்கான சர்வீஸ் ரோடு உள்ளது.இந்த ரோட்டில் பல இடங்கள் சேதமடைந்துள்ளதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. -வேல்முருகன் ,ஒட்டன்சத்திரம்.................---------பிளாஸ்டிக் குப்பையால் தொற்றுதிண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் அருகே குப்பை கொட்டி பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது .குப்பையை அகற்ற வேண்டும். ஹரிஷ், திண்டுக்கல்..............---------சேதமடைந்த மின் பெட்டிதிண்டுக்கல் சிலுவத்துார் ரோடு மழைநீர் சேகரிப்பு மைய நடைப்பயிற்சி வளாகத்தில் திறந்து கிடக்கும் மின் மோட்டார் பெட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்கு பலரும் நடைபயிற்சி ஈடுபடுவதால் மின் பெட்டியை சரி செய்ய வேண்டும். ஆறுமுகம் குழந்தை,முள்ளிப்பாடி ...............--------கிடப்பு பணியால் கழிவு நீர்திண்டுக்கல் -பழநி ரோடு இந்திராநகரில் இருந்து முத்தழகுபட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை அமைக்க தோண்டி போட்டு பல நாட்கள் ஆகியும் ,அப்படியே விடப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்கி உள்ளது. ஸ்டீவன்ராஜ், திண்டுக்கல்..................---------