| ADDED : மே 31, 2024 06:00 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சிறுவனுக்கு அலைபேசி வீடியோ காலில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு , சிறுமிக்கு ஆபாச செய்கை காண்பித்த பழநி தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆசிக்முகமது31. 2023ல் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணனை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த 15 வயது சிறுவர் ஓருவரோடு அலைபேசியில் ஆபாசமாக வீடியோ காலில் பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக மேற்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிக்முகமது மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி ஆசிக்முதுவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை,ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.பழநி குரும்பபட்டியை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணன். இவர் 2023ல் வீட்டின் அருகே நின்ற 10 வயது சிறுமி முன் ஆபாச செய்கை செய்து காண்பித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கிருஷ்ணனை கைது செய்தனர். நீதிபதி சரண்,குற்றவாளி கிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துதீர்ப்பளித்தார்.