உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சகோதரிகள் பலாத்கார வழக்கு: ரவுடி கைது

சகோதரிகள் பலாத்கார வழக்கு: ரவுடி கைது

சாணார்பட்டி: -திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் கத்தி முனையில் காதலர்களை கட்டிப்போட்டு அவர்கள் முன்பே சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி பிரசன்ன குமாரை 23, போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் அருகே 19, 17 வயது சகோதரிகளை 4 பேர் கும்பல் கடத்திச்சென்று காதலர்களை கட்டிபோட்டு அவர்கள் முன்பே கூட்டு பலாத்காரம் செய்தனர். அதனை வீடியோ எடுத்து அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர்.சாணார்பட்டி மகளிர் போலீசார் மீனாட்சிநாயக்கன்பட்டி சரண்குமார் 21, முத்தழகுபட்டி வினோத்குமார் 26, முருகபவனம் சூரிய பிரகாஷ் 22, ஆகிய மூவரை கைதுசெய்தனர்.தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை எஸ்.பி., பிரதீப் உத்தரவில் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ., ராஜேந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.பழநி பைபாஸ் பகுதியில் பதுங்கியிருந்த பிரசன்னகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 5 கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் அளித்த வாக்குமூலத்தில், தன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தேர்தல் போது தன்னை கைது செய்து விடுவார்கள் என தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், சம்பவத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து சகோதரிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறினார். அவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி