உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய்களுக்கு கருத்தடை 

நாய்களுக்கு கருத்தடை 

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் சுற்றித்திரியும் 10,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.திண்டுக்கல் நகரில் தெரு நாய்கள் எங்கு பார்த்தாலும் சுற்றித்திரிகின்றன. இதைக்கட்டுப்படுத்த பொது மக்கள் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாரளித்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. 10,000 நாய்கள் இருப்பது கண்டறிய இவற்றை கருத்தடை செய்து சில தினங்கள் பராமரிப்பதற்காக, திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி சொந்தமான இடத்தில் அதற்கான அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. இடம் தயாரானதும் கருத்தடை செய்வதற்கான பணியை அதிகாரிகள் துவக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி