உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சின்னாளபட்டியில் தெருநாய்கள் தொல்லை

சின்னாளபட்டியில் தெருநாய்கள் தொல்லை

சின்னாளபட்டி, : சின்னாளபட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.சின்னாளபட்டி பேரூராட்சியில் பரவலாக குடியிருப்புகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் ரக நாய்களை பலர் பராமரிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட், பூஞ்சோலை, காமராஜர் சாலை, வி.எம்.எஸ் காலனி, அஞ்சுகம் காலனி மேட்டுப்பட்டி, கீழக்கோட்டை, செக்காபட்டி, சிக்கனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் ஏராளமான தெரு நாய்கள் உலவுகின்றன. இவைகள் போதிய உணவு, பராமரிப்பு கிடைக்காமல் குப்பை கழிவுகளில் வீசப்படும் அழுகிய உணவுப்பொருட்களையும், இறைச்சி கழிவுகளையும் உண்ணுகின்றன. டூவீலர்களில் செல்வோர், பாதசாரிகளை கடிக்கின்றன. நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளான பலர் தனியார் மருத்துவமனைகளிலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்வது தொடர்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை