உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அலட்சியத்தால் அவதி n சாலையோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள் n விபரீதம் நடந்தால் நடவடிக்கை; இல்லையேல் கப்சிப்

அலட்சியத்தால் அவதி n சாலையோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள் n விபரீதம் நடந்தால் நடவடிக்கை; இல்லையேல் கப்சிப்

மாவட்டத்தில் கிராம ரோடுகள், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை யோர ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரிக்கும் நிலையில் ,முக்கிய நகர, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சிறுகடைகள், தள்ளுவண்டிகளை நிறுத்துவது, மரங்களை போட்டு ஆக்கிரமிப்பு, சாலையை மறித்து வாகனங்களை நிறுத்துவது போன்ற தற்காலிக ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளின் பிளக்ஸ் போர்டுகள், கட்டடங்களின் முகப்பு பகுதிகள் போன்றவை சாலைகளில் செல்வோர், வாகன ஒட்டுநர்களின் கவனத்தை சிதறடிப்பதுடன் இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அனுமதி இன்றி பிளக்ஸ் வைப்பதும் அதிகரித்துள்ளது. விழா முடிந்தும் அப்புறப்படுத்தாமல் பல மாதங்கள் அப்படியே உள்ளது. விபரீதம் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கும் துறை அதிகாரிகள் அதன்பின் கண்டுக்காமல் விடுகின்றனர். இதனை கண்காணித்து அகற்ற போலீசார், வருவாய் ,உள்ளாட்சி, நெடுஞ்சாலை துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை