உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தத்தில் டெய்லர் கொலை 2வது மனைவியிடம் விசாரணை

நத்தத்தில் டெய்லர் கொலை 2வது மனைவியிடம் விசாரணை

நத்தம்: நத்தத்தில் மர்மமான முறையில் டெய்லர் கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரது 2வது மனைவியிடம் விசாரிக்கின்றனர்.நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்த டெய்லர் சரவணன்52. இவருக்கு கார்த்திகா மணி 48, செல்வி35 என்று 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் 2வதாக முதல் மனைவியே தன் கணவருக்கு செல்வியை மணம் முடித்து வைத்தார். சரவணனுக்கும் செல்விக்கும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணன்,முதல் மனைவியை அவுட்டர் பகுதியில் குடிவைத்தும், 2வது மனைவி செல்வியை பெரிய கடை வீதி அருகே சுங்கச்சாவடி தெருவில் காஜா பட்டன் தைக்கும் கடை வைத்துக் கொடுத்து அந்த வீட்டிலேயே குடி வைத்திருந்தார். சரவணன்,நேற்று மதியம் சாப்பிடுவதற்கு முதல் மனைவி கார்த்திகா மணியிடம் வருவதாக கூறிவிட்டு 2வது மனைவி வீட்டுக்கு வந்தார். கணவர் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை என்றவுடன் முதல் மனைவி அலைபேசியில் சரவணனை,தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. நேராக கார்த்திகா மணி,சுங்கச்சாவடி வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி இருந்தது. வீட்டை திறந்து பார்த்த போது அங்கு சரவணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சரவணனின்,2வது மனைவி செல்வியிடம் விசாரணையை துவக்கினர். கொலையில் சம்மந்தப்பட்டதாக சிலரையும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ