உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுரோட்டில் எரிந்தது கார் 6 பேர் உயிர் தப்பினர்

நடுரோட்டில் எரிந்தது கார் 6 பேர் உயிர் தப்பினர்

பண்ணைக்காடு:கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் நேற்று அதிகாலை சென்ற கார் தீப்பற்றி எரிந்தது. இதில் பயணித்த சிதம்பரத்தை சேர்ந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சிதம்பரம் காட்டுமன்னர்கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று அதிகாலை 5 : 00 மணிக்கு பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது. தொடர்ந்து தீப்பற்றி எரிய அதில் இருந்த இளைஞர்கள் 6 பேரும் உடனடியாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடைக்கானல் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை