உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் சகதியை அகற்றிய மாநகராட்சி

ரோட்டில் சகதியை அகற்றிய மாநகராட்சி

திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் பாரதிபுரம் பழைய வேலை வாய்ப்பு அலுவலக ரோட்டில் உள்ள சகதியை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.திண்டுக்கல் பாரதிபுரம் பழைய வேலை வாய்ப்பு அலுவலக ரோட்டில் மழையால் சகதிகள் தேங்கியது. அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். சில நேரங்களில் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்களை அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பொறியாளர் சுப்பிரமணியன்,உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பாரதிபுரம் பழைய வேலை வாய்ப்பு அலுவலக ரோட்டில் தேங்கிய சகதியை மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ