உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஞானத்தின் உச்சம் ஆண்டிக்கோலம் குன்றக்குடி அடிகள் பேச்சு

ஞானத்தின் உச்சம் ஆண்டிக்கோலம் குன்றக்குடி அடிகள் பேச்சு

''துறவுதான் ஞானத்தின் உச்சம்.. அது தான் ஆண்டிக்கோலம்'' என குன்றக்குடி அடிகள் பேசினார்.பழநியில் நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் அவர் பேசியதாவது: அளவற்ற பெருமைகளுக்கு உடைய பழநியில் முத்தமிழ் மாநாடு நடக்கிறது. பழநியில் இருக்கும் முருகன் ஆண்டி கோலத்தில் இருக்கிறார். துறவுதான் ஞானத்தின் உச்சம். அதைத்தான் முருகன் எடுத்துரைக்கிறார். எங்கெல்லாம் முருகன் குடி இருக்கிறாரோ அங்கெல்லாம் மக்களின் குறைகள் தீரும். நோய்கள் தீரும். பிணிகள் அகலும். கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறனோ இல்லையோ கடவுள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நான் நடந்து கொள்கிறேனா; இல்லையா என்பதுதான் முக்கியம். மாநாட்டின் மணிமகுடமாக முதல்வர் ஸ்டாலின் உரை இருந்தது. அன்பால் உயிர்கள் ஒன்றாகும் அறத்தால் உலகம் நன்றாகும். இதுதான் இந்த மாநாட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.தருமபுர ஆதினம்: தருமபுர ஆதினம் பேசியதாவது: காசி, அறுபடை வீடுகள் போன்ற தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை அரசு செய்து வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் என பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துள்ளனர். சங்க இலக்கியங்கள் தொடங்கி ஆதினங்கள் வரைக்கும் பக்தி இலக்கியங்களில் முருகன் புகழ் தான் அதிகமாக பாடப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் பரவி இருக்கின்ற தமிழர்கள் வழிபடும் கடவுளாக முருகன் இருக்கிறார்.மதுரை ஆதினம்: மதுரை ஆதினம் பேசியதாவது: இந்த மாநாட்டு வாயிலாக இரு கோரிக்கை வைக்கிறேன். சங்கரன் கோவிலில் மாவீரன் புலித்தேவன் சிலையை நிறுவ அரசு அனுமதிக்க வேண்டும்.கோயில் நிலங்களுக்கு குத்தகை யாரும் கொடுப்பதில்லை. கோயில் நிலங்களை பலர் வைத்துள்ளனர். மேலும் கோயில் நிலங்களை மீட்க பாடுபட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்.என்னையும் சேகர்பாபுவையும் தொலைக்காட்சிகாரங்க எதிரிகள் ஆக்கி விட்டனர். ஆனால் நாங்க நண்பர்கள் தான் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.இதனால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை