உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிரம்பி வழியும் பழநி வரதமா நதி அணை

நிரம்பி வழியும் பழநி வரதமா நதி அணை

பழநி : பழநி சுற்றுப்பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வரதமாநதி அணை நிரம்பியது. நேற்றைய காலை 6:00 மணி நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 37.60 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ளது. இங்கு வினாடிக்கு 21 கன அடி நீர் வரத்து உள்ளது. 9 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரதமாநதி அணை நிரம்பிய நிலையில் 66.47 அடி நீர் உள்ளது. இங்கு வினாடிக்கு 106 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில் 106 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. குதிரையாறு அணையில் 56.45 அடி (80 அடி) தண்ணீர் உள்ளது. இங்கு வினாடிக்கு 35 கனஅடி நீர்வரத்து உள்ளது. 7 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பழநி பகுதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ