| ADDED : மே 16, 2024 05:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே இரு தரப்பு கருத்து வேறுபாட்டின் காரணமாக 6 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.நந்தவனப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் உள்ளது. பூர்வீகக கோயிலான இதன் நிகழ்ச்சிகளை ஊர் நிர்வாக குழுவினர் நடத்தி வந்தனர்.இந்நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கும், கோயில் நிர்வாக குழுவினர் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முன்னுரிமை தொடர்பான இந்த கருத்து வேறுபாடுகள் நீதிமன்றம் வரை சென்றது. இதனால் 2019 முதல் கோயில் மூடப்பட்டது.ஏப்ரல் மாதத்தில் ஊர் மக்கள் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., சக்திவேல், மேற்கு தாசில்தார் வில்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பும் கோயிலைத் திறப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்க 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று கோயில் திறக்கப்பட்டது.