உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

வடமதுரை, : அய்யலுார் அருகே எஸ்.களத்துாரை சேர்ந்த கூலிதொழிலாளி லட்சுமி 55. இவர் வீட்டின் அருகே வசிப்பவர் சினேகா. இவர்கள் இடையே பிரச்னை உள்ள நிலையில் கழிப்பறை கட்ட வைத்திருந்த தகர சீட்டுகளை சினேகா, அவரது கணவர் கண்ணன், உறவினர்கள் ஸ்ரீரங்கன், ஈஸ்வரி துாக்கி எறிந்ததால் தகராறு ஏற்பட்டது. லட்சுமி தாக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டார். கண்ணனை வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கைது செய்தார். மற்றவர்களை தேடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி