உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் நடக்கும் பணிகள் சிறப்பு;எம்.எல்.ஏ., காந்திராஜன்

கொடையில் நடக்கும் பணிகள் சிறப்பு;எம்.எல்.ஏ., காந்திராஜன்

திண்டுக்கல் : ''கொடைக்கானலில் நடக்கும் வனத்துறை பணிகள் சிறப்பாக உள்ளதாக,''சட்டசபை பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் பேசினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இரு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடந்தது. மதிப்பீட்டு குழுவிற்கு வழங்கப்பட்ட வேளாண் உள்ள அரசு துறைகளில் இருந்து பெறப்பட்ட 10 கருத்துக்கள் ஆய்வு செய்யப்படும். இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகின என்றார்.26 பயனாளிகளுக்கு ரூ.28.67 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். குழு உறுப்பினர்கள் அம்பேத்குமார், அருண்குமார், கருமாணிக்கம், முத்துராமலிங்கம், செல்லுார் கே.ராஜூ, ராமச்சந்திரன், மணியன், வெங்கடேஸ்வரன், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி பங்கேற்றனர். இதை தொடர்ந்து திண்டுக்கல் எம்.வி.எம்.,மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ