உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாலிக்கு தங்கம் தர காசு இல்லை பேனா சிலைக்கு காசு இருக்காம்: பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பேச்சு

தாலிக்கு தங்கம் தர காசு இல்லை பேனா சிலைக்கு காசு இருக்காம்: பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பேச்சு

ஒட்டன்சத்திரம் : தாலிக்கு தங்கம் தர காசு இல்லையாம், ரூ.80 கோடியில் பேனா சிலை வைக்க காசு இருக்காம் என திண்டுக்கல் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா பேசினார்.ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியில் ஓட்டு சேகரித்த அவர் பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் ஒருவரை தி.மு.க., வேட்பாளராக அறிமுகப்படுத்தியது. அவரும் எம்.பி., ஆனார். அவரது பெயர் யாருக்காவது தெரியுமா. வெற்றி பெற்றவரையும் கூட்டிக்கொண்டு வந்தல்லவா ஓட்டு கேட்க வேண்டும். அவரை கூட்டி வருவதற்கு தி.மு.க.,விற்கு பயம். தாலிக்கு தங்கம் கொடுக்க காசு இல்லையாம். ஆனால் ரூ.80 கோடியில் பேனா சிலை வைக்க காசு உள்ளதாம். தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்க வரும்போது நீங்கள் வெற்றி பெற்றால் பிரதமர் யார் என கேளுங்கள். சொல்லத் தெரியாது. மோடி தான் எங்களது பிரதமர் வேட்பாளர் என சொல்லக்கூடிய ஒரே கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. என்னை வெற்றி பெறச் செய்தால் பிரதமர் மோடியிடம் இருந்து திட்டங்களை வாங்கிக் கொண்டு வந்து இங்கு சேர்ப்பேன் என்றார்.பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர்கள் ருத்ரமூர்த்தி, ரகுபதி, பா.ம.க., மாவட்டச் செயலாளர் வைரமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் சதீஷ், அ.ம.மு.க., நிர்வாகி தங்கராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை