உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்:கொடைக்கானலில்நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.அக்னி நட்சத்திர வெயில் துவங்கிய நிலையில் கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் தணிந்து குளு, குளு வானிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மேகக் கூட்டம் தரை இறங்குகிறது. நேற்று மதியத்திற்கு பின் லேசான சாரல் பெய்தது.இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி கோக்கர்ஸ்வாக் ,வன சுற்றுலாத்தலங்களை பயணிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.நகரில் மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரத்தில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை