உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடியில் விடிய விடிய மழை மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

தாண்டிக்குடியில் விடிய விடிய மழை மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலுடன் வறண்ட வானிலை நீடித்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யத் துவங்கி இரவு, 9:00 மணிக்கு பின் சூறாவளியுடன் கனமழை விடிய விடிய கொட்டியது.இதில், தடியன்குடிசை - குப்பம்மாள்பட்டி ரோட்டில் 10க்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்களும் சேதமடைந்தன. வத்தலக்குண்டு - தாண்டிக்குடி ரோட்டில் பட்லங்காட்டில் மண் சரிவு ஏற்பட்டது. தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இடையூறுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம், 2:00 மணிக்கு பின்னரே பட்லங்காடு பகுதியில் மண் சரிவு சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து துவங்கியது.கொடைக்கானல் -அடுக்கம் ரோட்டிலும் கனமழையால் வெவ்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்து இடையூறுகளை சரிசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை