உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிருஷ்ணன் கோயிலில் உறியடி, மின்ரத ஊர்வலம்

கிருஷ்ணன் கோயிலில் உறியடி, மின்ரத ஊர்வலம்

திண்டுக்கல், : திண்டுக்கல் யாதவ மேட்டு ராசக்கா பட்டி கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழா, மின்ரத ஊர்வலம் நடந்தது.அதிகாலை 5:00 மணியிலிருந்து கிருஷ்ணருக்கு பால்,பழம்,பன்னீர், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை நடந்தது. காலை 7:00 மணிக்கு முனியப்பன் கோயில் தெப்பத்திலிருந்து பால் கூட ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதி வழியாக வந்தது. தொடர்ந்து இரவு உறியடி விழா, மின்ரத ஊர்வலம் நடந்தது. இதை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்தனர். மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மோகன், நெப்போலியன், சவுந்தரம், சின்னு காளிதாஸ், அருண், ரமேஷ், லோகநாதன், பகுதி செயலாளர்கள். சுப்ரமணி, சேசு,ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன்.மாவட்ட சார்பணி நிர்வாகிகள் திவான் பாட்ஷா, ஜெயபாலன், ஜெயராமன், கோபால் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் யாதவ பஜனை மடத்தின் தலைவர் பாலன் யாதவ் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை