உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு

ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு

ஆயக்குடி : பழநி ஆயக்குடி அருகே கோம்பைபட்டி பெரியதுரை கருப்பசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவில் 100-க்கு மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.பழநி அருகே கணக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை பட்டியில் பிரசித்தி பெற்ற பெரியதுரை கருப்பண்ணசுவாமி, தன்னாசியப்பன், செல்வவிநாயகர் கோயில் உள்ளது. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆடுகளை பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று நுாற்றுக்கு மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு செய்தனர். இதை தொர்ந்து அனைவருக்கும் உணவு சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை