உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவிகள் கழிப்பறை அருகே நின்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

மாணவிகள் கழிப்பறை அருகே நின்ற வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் பெண்கள் என 1200 பேர் படிக்கின்றனர். பெண்களுக்கான கழிப்பறை சுற்று சுவரை யொட்டி உள்ளது. இங்கு நேற்று காலை 11:00 மணி இடைவேளை நேரத்தில் கழிப்பறை சென்ற மாணவிகள் ஒரு நபர் நிற்பதாக ஆசிரியர்களுக்கு தகவல் கூறினர். அங்கு சென்ற ஆசிரியர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். ஆர்.கோம்பையை சேர்ந்த செந்தில்குமார் என தெரியகுஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அலைபேசியில் படங்கள் எதுவும் எடுத்தாரா எனவும் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !