கம்யூ., எம்.பி., உட்பட 100 பேர் உடல் தானம்
திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் முன்னாள் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவு தினத்தை யொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் தனது மனைவி கவிதாவுடன் உடல் தானம் செய்தார். இதே போல் 11 தம்பதியர்கள் உள்ளிட்ட 100 பேர் உடல் தானம் செய்தனர். மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் அரபுமுகமது வரவேற்றார். மருத்துவக்கல்லுாரி முதல்வர் வீரமணி, துணை முதல்வர் கீதாராணி, உடற்கூறாய்வில் துறை மருத்துவர் ஜெயமணி ஆகியோர் வாழ்த்தினர். ஒன்றியச்செயலாளர் சரத்குமார் நன்றி கூறினார்.