உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடியில் 15 செ.மீ., மழை

தாண்டிக்குடியில் 15 செ.மீ., மழை

தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் நேற்று முன்தினம் 2 மணி நேரம் இடிமின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததில் 15 செ.மீ., மழை பதிவானது. கடந்த ஒரு மாதமாக வறண்ட வானிலையுடன் சுட்டெரிக்கும் வெயில் நீடித்தது. திடீரென இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மருதாநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கரையோரங்களில் இருந்த விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. மலைப்பகுதிகளில் கனமழையால் மின்தடை ஏற்பட்டு கிராமப் பகுதிகள் இருளில் மூழ்கின. நேற்று மாலையும் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் நகர் ,மேல்மலை பகுதியில் மிதமான மழை பெய்தது.பழநி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் குளிர்ச்சி அடைந்தனர். பழநி முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ