உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். வத்தலக்குண்டு காந்தி நகர் ஓம் சக்தி கோயில் தெருவில் வசிப்பவர் மேகலா. இலங்கை தமிழரான இவர் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி சென்றார். பின்னர் திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, ரூ. 30 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரிந்தது.முக்காடு அணிந்த இருவர் ஆட்டோவில் வந்து திருட்டில் ஈடுபட்டது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை