உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 1500 கி. ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 1500 கி. ரேஷன் அரிசி பறிமுதல்

ஒட்டன்சத்திரம்: விருதுநகரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட 1500 கிலோ அரிசி, 800 கிலோ பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சத்திரப்பட்டி டோல்கேட்டில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் ஒட்டன்சத்திரம் -- பொள்ளாச்சி பைபாஸ் ரோடு சத்திரப்பட்டி டோல்கேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரளா பதிவு எண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது 1500 கிலோ ரேஷன் அரிசி, 800 கிலோ ரேஷன் பருப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.ரேஷன் பொருட்களை கடத்திய கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த தினேஷ், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்கி கடத்துவது தெரிந்தது. லாரியுடன் அரிசி, பருப்பை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி