உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சொத்து வரி செலுத்தாவிடில் குடிநீர் கட் பாக்கியை வசூலிக்க 20 குழு அமைப்பு

சொத்து வரி செலுத்தாவிடில் குடிநீர் கட் பாக்கியை வசூலிக்க 20 குழு அமைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி செலுத்தாதவர் குடிநீர் இணைப்பை'கட்'செய்வதோடு இதன் பாக்கியை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி,குடிநீர் வரி,பாதாள சாக்கடை வரி,தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்த வேண்டும். இவர்களில் சிலர் எந்த வரிகளும் பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருப்பதால் மாநகராட்சிக்கு கோடி கணக்கில் வரி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சொத்து வரி ரூ.22 கோடி,தொழில் வரி ரூ.4 கோடி,கடை வாடகை ரூ.9 கோடி,குடிநீர் ரூ.14 கோடி,பாதாள சாக்கடை கட்டணம் ரூ.3 கோடி என ரூ.கோடிக்கணக்கில் பாக்கி உள்ளது. இதனால் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது பாக்கி நிலுவை தொகையை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் 20 குழுக்களை அமைத்துள்ளது. 2025 ஜன.31 க்குள் வரி பாக்கி தொகை செலுத்தா விடில் குடிநீர் இணைப்பை துண்டிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ