உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லோக் அதாலத்தில் 2327 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 2327 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல்: சிறு குற்றவழக்குகள், குடும்ப நல வழக்குகள்,இழப்பீடு உட்பட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் பொருட்டு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் லோக் அதாலத் நிகழ்ச்சி முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகளாக நடந்த லோக் அதாலத்தில் நிலுவை வழக்குகள், முன்வழக்குகள் என 2327 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.19 கோடி 81 லட்சத்து 98 ஆயிரத்து 931க்கு தீர்வு எட்டப்பட்டது. வாகன விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.53 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட நீதிபதி முத்துசாரதா வழங்கினார். நீதிபதிகள் வேல்முருகன், முரளிதரன், விஜயகுமார், சரண், தீபா, கோகுலகிருஷ்ணன், கண்ணன், சோமசுந்தரம், திரிவேணி, கமலா, காயத்ரி தேவி, பாக்யராஜ்,தினேஷ்குமார், ஆனந்தி, கிருபா பிரியதர்ஷனி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ