மேலும் செய்திகள்
ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்
06-Sep-2025
திண்டுக்கல் : மேற்குவங்க மாநிலம் புருலியா-- திருநெல்வேலி வரை புருலியா அதிவிரைவு ரயிலில், தென்மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதில் சோதனை நடத்தினர்.இதில் இன்ஜினுக்கு அருகே உள்ள பயணிகள் பொது பெட்டியின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பேக்குகளில் 25 கிலோ குட்கா புகையிலை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
06-Sep-2025