உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சிறுமலை வனத்தில் கேலை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது- 2 நாட்டு துப்பாக்கிகள், இறைச்சி பறிமுதல்

 சிறுமலை வனத்தில் கேலை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது- 2 நாட்டு துப்பாக்கிகள், இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் கேலை ஆடு வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், கேலை ஆடு இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட வன பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. யானை, காட்டுப்பன்றி, முயல், மான், மிளா, உடும்பு, எறும்புத்தின்னி உள்ளிட்ட வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் சில சமூக விரோதிகள் வேட்டை யாடுகின்றனர். இந்நிலையில் சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனாவுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கர் தலைமையில், மலையூர் பீட் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட தவசிமடையில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தவசிமடை பெருமாள் 38, செங்குறிச்சி ஆண்டிச்சாமி 39, கார்த்திக் 23, ஆகியோர் வனப்பகுதியில் கேலை ஆடு வேட்டையாடியது தெரிய வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் திருவிழாவிற்கு வானவேடிக்கை வெடிப்பதற்காக வந்தவர்களிடம் வெடிகளை மொத்தமாக வாங்கி அதில் இருந்து மருந்துகளை தனியாக பிரித்து தோட்டாக்களில் நிரப்பி வேட்டைக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கிகள், சமைப்பதற்காக வைத்திருந்த கேலை ஆடு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை