உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடர் மழையால் நீரில் மூழ்கிய 30 ஏக்கர் விவசாய பயிர்கள்

தொடர் மழையால் நீரில் மூழ்கிய 30 ஏக்கர் விவசாய பயிர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 30 ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல்லையடுத்த குஞ்சனம்பட்டியில் 500க்கு மேற்பட்டோர் நெல், தட்டைப்பயிர், மக்காச்சோளம், பீக்கங்காய், சுண்டல் உள்ளிட்ட பல பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். தொடர் மழையால் இப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் நிறைந்து தண்ணீர் புகுந்ததில் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.20 நாட்களுக்கு முன்பு 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. வேளாண் இணை இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில், ''நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். சேதம் குறித்து பேரிடர் நிவாரண அறிக்கைக்கு தெரிவித்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !