உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீ விபத்தில் 30 ஆடுகள் பலி

தீ விபத்தில் 30 ஆடுகள் பலி

சின்னாளபட்டி : பித்தளைப்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மெய்மேலி 52. 200க்கு மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வரும் இவர் பித்தளைப்பட்டி விலக்கு அருகே பருத்திக்காட்டில் நான்கு நாட்களாக கிடை அமர்த்தி இருந்தார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றிருந்த சூழலில் 30 ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.மாலை 6:30 மணிக்கு ஆடுகளுடன் திரும்பிய போது அப்பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீ பட்டியை சூழ்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதில் 30 ஆட்டுக்குட்டிகள் உடல் கருகி பலியாகின. திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி