உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 30 புதிய பஸ்கள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 30 புதிய பஸ்கள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதியில் வரும் ஜனவரிக்குள் 30 புதிய பஸ்கள் இயக்கப்படும்'' என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.ஒட்டன்சத்திரம் தொகுதி தேவத்துார், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கொத்தையம் ஊராட்சிகளில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த அவர் பேசியதாவது:முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளச் சாலைகள் ரூ.8000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதியதாக 2500 பஸ்கள் வழங்கப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள் ஜனவரி மாதத்திற்குள் 30 புதிய பஸ்கள் இயக்கப்படும், என்றார்.திட்ட இயக்குனர் திலகவதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பாலமுருகன், கோட்ட பொறியாளர் பொண்ணு வேல், திட்ட அலுவலர் காலில் செல்வராணி, தாசில்தார் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா, ஒன்றிய தலைவர் சத்திய புவனா, துணைத்தலைவர் தங்கம், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீஸ்வரன், ஊராட்சி தலைவர் சுதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை