உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத்திறனாளிகள் 357 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் 357 பேர் கைது

திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமைவகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றதால் 357 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர். பழநி : ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், கன்னிச்சாமி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களைபோலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ