4 லாரிகள் பறிமுதல்: ரூ.2 லட்சம் அபராதம்
திண்டுக்கல்: முறையான ஆவணங்களின்றி திண்டுக்கல் வழியாக சென்ற 4 லாரியை போலீசார் பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் வழியாக முறையான ஆவணங்களின்றி லாரிகள் மதுரை,கோவைக்கு செல்வதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். எந்த ஆவணமும் இல்லாமல் வந்த 4 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.