உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் கிராம திருவிழாவில் பொள்ளாச்சி சிறுமி மானபங்கம் 2 தம்பதிகள் உட்பட 5 பேர் கைது

அய்யலுார் கிராம திருவிழாவில் பொள்ளாச்சி சிறுமி மானபங்கம் 2 தம்பதிகள் உட்பட 5 பேர் கைது

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் கோடாங்கி சின்னான்பட்டி திருவிழாவிற்கு வந்திருந்த பொள்ளாச்சி பகுதி 15 வயது சிறுமி மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் இரு தம்பதிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்,திருவிழாவிற்காக பொள்ளாச்சி பகுதி 15 வயது சிறுமி உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். ஜூன் 3 மாலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடையும் நேரத்தில் சிறுமி தனியே நடந்து சென்றபோது கட்டட தொழிலாளி ராஜபாண்டி 35, சிறுமியை தனி அறைக்கு இழுத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிறுமி சத்தமிடவே ராஜபாண்டி அங்கிருந்து தப்பினார். காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதை வெளியே சொல்லக்கூடாது எனக்கூறி ராஜபாண்டியின் குடும்பத்தினர் சிறுமியையும், அவரது உறவினர்களை தாக்கி மிரட்டியும் உள்ளனர். ராஜபாண்டியை போக்சோ சட்டத்திலும், மிரட்டிய இவரது மனைவி பிரேமலதா 32, மற்றொரு தம்பதியான விஜயக்குமார் 34 ,காயத்ரி 31, இவர்களது உறவினர் சிங்கராஜ் 50 ,ஆகியோரை வடமதுரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை