உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்:மேற்குவங்கம் மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலி சென்ற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் பைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், வெள்ளிதோறும் இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு புருலியா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருநெல்வேலி புறப்பட்ட ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்த ரயிலில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவில்லா பெட்டிகளில் கேட்பாரற்று இருந்த பைகளை சோதனை செய்ததில் கஞ்சாபொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த 7 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி தமிழக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதை கடத்தி வந்தவர்கள் யார் என கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை சோதனையிட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை