மேலும் செய்திகள்
விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.5.8 லட்சம் அபராதம்
09-Jan-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி சான்று, ரோடு வரி செலுத்தாத லாரி உட்பட 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்.வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ஏற்றி வரும் லாரிகள், வாகனங்கள் தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் வருவதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி நேற்று பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பாளையம், குஜிலியம்பாறை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த லாரிகள், மினிலாரிகளை சோதனை செய்தனர்.2 லாரிகள் உட்பட 7 வாகனங்களில் தகுதிசான்று, ரோடு வரி செலுத்தாமல் இருந்தது தெரிந்தது. இவைகளை பறிமுதல் செய்து ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்.
09-Jan-2025