உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 97 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: 30 கடைகள் ரிஜெக்ட்

97 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: 30 கடைகள் ரிஜெக்ட்

திண்டுக்கல் : தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் 97 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதியளித்து 30 கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு,பழநி,கொடைக்கானல்,ஒட்டன்சத்திரம்,கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் முக்கிய பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளை வியாபாரிகள் அமைக்கின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம்,தீயணைப்பு துறை சார்பில் அனுமதி உரிமம் வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்காக 1 மாதத்திற்கு முன்பே ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதி பெற்ற முறையான ஆவணங்கள்,வசதிகளை கொண்ட 97 பேருக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டது. இவர்கள் நேற்று முதல் மாவட்டத்தின் மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகளை அமைத்து பட்டாசு விற்பனையை துவக்கியுள்ளனர். 30 பேருக்கு முறையான வசதிகள் இல்லாத காரணத்தினால் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு பட்டாசு கடைகளை ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை