மேலும் செய்திகள்
சேதமாகும் துவக்கப்பள்ளி கட்டட கூரையால் அவதி
18-Jul-2025
திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் கேபிள் ஒயர்கள் மிக தாழ்வாக தொங்கி கொண்டு உள்ளதால் இரவில் நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கழுத்தில் மாட்டி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது . பாரதி, திண்டுக்கல். ...........-------தாழ்வான மீட்டர் பெட்டி திண்டுக்கல் பழநி ரோடு நான்கு வழிச்சாலை பஸ் ஸ்டாப் அருகே திறந்த நிலையில் உள்ள மின் மீட்டர் பெட்டியால் விபத்து அபாயம் உள்ளது. சிறுவர்கள் தொடும் தூரத்தில் உள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. சிவக்குமார், திண்டுக்கல். .................--------ரோட்டில் செல்லும் குடிநீர் ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் மேம்பாலத்திற்கும் அத்திக்கோம்பை ஓடைக்கும் இடையே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால்சாமி, ஒட்டன்சத்திரம். ................---------குப்பையால் சுகாதாரக்கேடு திண்டுக்கல் வத்தலகுண்டு ரோட்டில் குப்பை கொட்டி பல மாதங்களாக அள்ளப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. விஷ பூச்சிகள் முகாமிடுவதால் அப்புறப்படுத்த வேண்டும். அஜ்மீர், திண்டுக்கல். ..........----------மரத்தில் அடிக்கப்படும் ஆணி சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள மரத்தில் ஆணியடித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் பலகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளி, கே.அய்யாபட்டி. .............---------- போரிகார்டால் விபத்து வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னம்பட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பேரி கார்டில் பலகை ஏதும் இன்றி கம்பிகள் மட்டுமே இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பழனிச்சாமி, தென்னம்பட்டி. ..............-----------சாக்கடையில் பாலிதீன் பழநி அடிவாரம் மதனபுரத்தில் கோயில், பள்ளி அருகே சாக்கடையை பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் பாலிதீன் பைகள் அடைத்துள்ளது . அதிகளவில் மாணவர்கள் சென்று வருவதால் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். முகமதுஜின்னா ,மானுார். ...........
18-Jul-2025