உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க.,விற்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர் நத்தம் விசுவநாதன் பேச்சு

தி.மு.க.,விற்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர் நத்தம் விசுவநாதன் பேச்சு

கன்னிவாடி: ''தி.மு.க.,விற்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர்''என,முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கன்னிவாடியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மது போதையை விட அதிகார போதை மிகவும் ஆபத்தானது. தி.மு.க.,விற்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பொருட்கள் கிடைக்கிறது. போலீசார், ஏவல் துறையாக செயல்படுகின்றனர். முன்னாள் முதல்வர் பழனிசாமி வழிகாட்டுதல்படி, அனைவரும் ஒன்றிணைந்து அ.தி.மு.க., வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார். ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி, தலைமை வகித்தார்.ஜெ., பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட துணை செயலாளர் விஜயபாலமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தனர். மீனவரணி இணை செயலாளர் சின்னையா, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !