கால்பந்தில் வென்ற அனுகிரகா பள்ளி
திண்டுக்கல், : வேலுார் மாவட்டம் காட்பாடியில் கிங்ஸ்டன் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., பள்ளியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தென்மண்டல கால்பந்து போட்டிகள் செப்.12 முதல் செப்.15 வரை நடந்தது. தமிழகத்தின் 256 பள்ளி அணிகள் பங்கேற்றன . திண்டுக்கல் அனுகிரகா இன்டர்நேஷனல் பள்ளி அணி சென்னை பி.வி. பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியை 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் இடம் பெற்றது. இந்த அணியினருக்கு அனுகிரகா பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் பரிசு கோப்பை வழங்கினார். பள்ளி தாளாளர் ஸ்ரீதர், மாவட்ட கால்பந்து துணைச் செயலர்கள் ஈசாக்கு,தங்கத்துரை, தலைமை பயிற்சியாளர் டைட்டஸ், மாவட்ட செஸ் செயலர் அப்துல் நாசர், பேட்மிட்டன் செயலர் நாராயணன், யோகா ராஜகோபால், மூத்த விளையாட்டு வீரர்களான புருஷோத்தமன் ,ராஜமோகன், அனுகிரகா பள்ளி முதல்வர் அனிஷ் பாத்திமா பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பீட்டர் செய்தார்.